மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
புதிய இணைப்பு
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம் பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் , ரெலோ கட்சியின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மன்னார் - பஜார் பகுதி
தமிழினப் படுகொலையில் 16ஆம் ஆண்டு நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மமன்னாரில் (Mannar) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் - பஜார் பகுதியில் இன்றைய தினம் (18.05.2025) குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சுடர்
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளடங்களாக சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







