இலங்கையில் மோசமான இனவாத அரசு - சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு

sri lanka government mullivaikkal memorial suresh premachchanthiran
By Vanan May 15, 2021 07:27 AM GMT
Report

இறுதி யுத்தத்தில் குவியல் குவியலாக தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் உயிரிழந்த மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த சிறிய நினைவுத்தூபியையும் ஸ்ரீலங்கா அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்தும் நினைவேந்தல் நிகழ்விற்கு தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதையும் கண்டித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்தத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.

அந்த பொதுமக்களின் நினைவுகளை மீட்டிக்கொள்வதும் அவர்களை கௌரவப்படுத்துவதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். சர்வதேச சட்டவாயங்களின் அடிப்படையில் இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்களை நினைவுகூர்வதாக இருந்தாலும் சரி, போராளிகளை நினைவுகூர்வதாக இருந்தாலும்சரி பலத்த போராட்டத்தின் மத்தியிலேயே இத்தகைய நினைவுகூர்தலை நாங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது.

கொரோனா என்பது ஒருபக்கம் இருக்க, ஊர்வலங்களாக இருந்தாலும்சரி, உண்ணாவிரதங்களாக இருந்தாலும்சரி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிறிய பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும்சரி உடனடியாகவே பொலிசார் நீதிமன்றங்களை அணுகி தடையுத்தரவைப் பெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

இதே நிலைமைதான் முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன எமது மக்களை நினைவுகூர்வதற்கெதிராகவும் நீதிமன்ற தடையுத்தரவுகளையும் பொலிசார் பெற்றுள்ளனர். அதுமாத்திரமல்லாமல், இறந்த மக்களை நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய நினைவுச்சின்னம்கூட அரச இயந்திரத்தினால் உடைத்தெறியப்பட்டிருக்கின்றது.

இராணுவம் பொலிஸ் உட்பட்ட அரச இயந்திரமானது மக்களின் உணர்வுகளை சிதைப்பதென்பது கண்டிக்கத்தக்கதும் அநாகரிகமானதுமாகும். அரசாங்கத்தின் மனித உரிமைக்கெதிரான செயற்பாடுகளை கனேடிய தூதுவர் கண்டித்திருப்பதை நாங்கள் வரவேற்பதுடன், ஏனைய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்பதுடன் நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்விதமான அரச தலையீடுகளுமின்றி நடைபெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு தமது அழுத்தங்களை உயர்மட்ட அளவில் பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

தென்பகுதியில் அரசுக்கெதிராகப் போராடிய பொதுமக்களும் போராளிகளும் சிங்கள மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள். அதற்கு எத்தகைய தடை உத்தரவுகளும் கிடையாது. வடக்கு-கிழக்கில் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்படுகிறது.

அதற்காக நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் ஒன்றுகூடி இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகாப்புடன் பிரித் ஓதுதலும் இரவு பகலாக நடைபெறுகிறது.

ஆனால் தமிழ் மக்கள் தமது மரணித்துப்போன உறவுகளை நினைவுகூர்வது தடைசெய்யப்படுகிறது. இதிலும்விட மோசமான இனவாத அரசொன்று இலங்கையில் இருந்திருக்க முடியாது.

அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை பல்வேறுபட்ட முனைகளிலும் அடக்கியாள முயற்சிப்பதுடன் அவர்களது கௌரவத்தையும் சிதைத்து அழிக்கின்றது.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வரவேண்டும்.

எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலைப் பின்பற்றி, தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் வழிவிட வேண்டும் - என்றுள்ளது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026