எலான் மஸ்கிற்கு கெடு விதித்த நீதிமன்றம்! எக்ஸ் தளத்திற்கு வந்துள்ள அபாயம்
பிரபல சமூகவலைதளமான x நிறுவனத்திற்கு பிரேசில்( Brazil) உச்ச நீதிமன்றத்தால் கெடு விதிக்கபட்டுள்ளது.
எலான் மஸ்க் (Elon Musk) டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய பின்னர் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.
கெடு விதித்த நீதிமன்றம்
எனினும் அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் (x) அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார்.
மேலும், அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |