இராஜாங்க அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்! சோபித தேரர் கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் (express pearl) கப்பல் தீபரவினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித புரிதலும் இன்றி கருத்துக்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா சட்டநடவடிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.
176 ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் நான்கு திமிங்கிலங்கள் உயிரிழந்தமைக்கு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான நச்சு இரசாயனங்கள் காரணமென நிபுணர்கள் குழு உறுதிப்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பருவ மாற்றம் காரணமாக ஏற்பட்ட அழிவு இவை என கருத்து வெளியிட்டதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.