தமிழர் பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபப் பெண்!
திருகோணமலையில் வயதான பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மூதூர் காவல் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தடயியல் பிரிவு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் வயதான கணவன் மற்றும் மனைவி இருவருமே தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு (28-07-2026) குறித்த வீட்டுக்குள் உட்புகுந்த மர்ம நபர்கள், இருவரையும் தாக்கியதாகவும் இதில் தனது மனைவி உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணிண் கணவர் மூதூர் காவல் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு திருகோணமலை தடயியல் பிரிவு காவல்துறையினர், மூதூர் காவல் நிலையப் காவல்துறையினர் ஆகியோர் இன்று (29-07-2026) காலை வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, உயிரிழந்த பெண்ணிண் கணவரை மூதூர் காவல் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

மர்மமாக உயிரிழந்த பெண்ணிண் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |