இலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் குறித்து ஜனாதிபதி அநுரவுக்கு பறந்த கடிதம்

Human Rights Commission Of Sri Lanka Refugee Anura Kumara Dissanayaka Sri Lanka Myanmar
By Sathangani Dec 29, 2024 11:32 AM GMT
Report

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் (Myanmar) அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய (Dehideniya) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் (Sri lanka Navy) மீட்கப்பட்டனர்.

தீ பிடித்து எரிந்த ஏர் கனடா விமானம்: பதற வைக்கும் காணொளி

தீ பிடித்து எரிந்த ஏர் கனடா விமானம்: பதற வைக்கும் காணொளி

குடியகல்வு கட்டுப்பாட்டாளர்

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.

இலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் குறித்து ஜனாதிபதி அநுரவுக்கு பறந்த கடிதம் | Myanmar Refugees In Sl Letter To Anura From Hrcsl

எனினும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் (immigration and emigration department) நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்குவது தமது திணைக்களத்தின் ஊடாக அன்றி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் ஊடாகவே என தெரிவித்துள்ளது.

யாழில் அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

யாழில் அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது

 40 இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் குறித்து ஜனாதிபதி அநுரவுக்கு பறந்த கடிதம் | Myanmar Refugees In Sl Letter To Anura From Hrcsl

நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமில் உள்ள அகதிகளில் 40 இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுவதால், இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகளின் தடையின்றி குறித்த அகதிகளிடம் செல்வதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024