நிலவை சுற்றும் மர்மப்பொருள்! நாசா வெளியிட்ட படங்கள்
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருளொன்றின் படங்களை வெளியிட்டுள்ளது.
நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இதன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ள குறித்த பொருள் ஏலியன்களா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளி மிதவைப் பலகை
வெள்ளி மிதவைப் பலகை (surfboard) வடிவிலான பொருளொன்று நிலவை சுற்றி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
எனினும், நிலவை சுற்றி வரும் குறித்த மர்ம பொருளின் படம் யு.எஃப்.ஒ (UFO) அல்ல எனவும் கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட டானுரி சந்திர சுற்றுப் பாதையின் படங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட இரண்டு டானுரி சந்திர சுற்றுப் பாதைகளும் ஒன்றையொன்று கடந்து சென்றறுள்ளன.
டானுரி சந்திர சுற்றுப்பாதை
கடந்த மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிக்கிடையில் இடம்பெற்ற நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது நாசாவால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சந்திரனைச் சுற்றி வரும் மர்ம பொருளின் படம் யு.எஃப்.ஒ அல்ல என கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிலவை சுற்றி வரும் டானுரியின் உருவம் சிதைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அத்துடன், எல்.ஆர்.ஓ.வின் கேமரா வெளிப்பாடு நேரம் மிகக் குறைவாக அதாவது, 0.338 மில்லி விநாடிகள் மட்டுமே என்றாலும், இரண்டு விண்கலங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் அதிக பயண வேகம் இருப்பதால், பயணத்தின் எதிர் திசையில் டானுரி அதன் அளவை 10 மடங்கு அதிகமாகப் உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |