பல்கலைக்கழக மாணவர் பெயரில் கூட்டத்திற்குள் ஊடுருவிய மர்ம மனிதன்!
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் மர்ம மனிதன் ஒருவன் ஊடுருவி வீடியோ பதிவு செய்து சென்றுள்ள விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 12 மணிக்கு கூட்டம் நடைபெற்ற மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்திற்குள் பல்கலைக்கழக டீசேட் அணிந்து பல்கலைகழக மாணவர்கள் என்ற போர்வையில் அந்த மர்ம மனிதன்ஊடுருவி வீடியோ பதிவுகளை செய்ததுடன். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து சென்றுள்ளனன்.
அந்த மர்ம மனிதன் பல்கலைக்கழக மாணவன் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றார்கள் பல்கலைக்கழக மாணவர்கள். அந்த மர்ம மனித யார் என்பதுடன், அது பயங்கரவாதச் செயலைச் செய்யும் நோக்குடன், அல்லது ஏதாவது நாசகாரச் செயலைச் செயும் நோக்குடன் வந்தவரா என்று சந்தேகத்த எழுப்புகின்றார்கள் ஊடகவியலாளர்கள்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் கூட போராட முடியாத வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.
இந்த போராட்டத்தை முடக்குவதற்கு அரசு அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது எனவே இதற்கான பாதுகாப்பை சிவில் சமூக அமைப்புகள் சர்வதேசத்திடம் கோரியுள்ளனர்.