திடீரென இடைநிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை
Sri Lanka
India
Nagapattinam
By Shalini Balachandran
நாகப்பட்டினம் (Nagapattinam)– காங்கேசன்துறை (kankesanthurai) கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பல் சேவை, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை
மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று (26) முதல் நாளை மறுதினம் (28) வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் முதலாம் திகதி நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம் போல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி