விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்: பாதிக்கப்பட்டவர் கவலைக்கிடம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த சொகுசு வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளான இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் திஹாரிய, கல்கெடிஹேனே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்ற இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினார்.
தற்போது மன குழப்பத்தில்
இந்நிலையில், வட்டுப்பிட்டிவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) மாற்றப்பட்ட போதிலும், சுயநினைவின்றி இருக்கும் இளைஞனின் உயிர் இயந்திரங்களினால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த இளைஞன் தாயாரை இழந்துள்ளதாகவும் அவரது தந்தை தற்போது மன குழப்பத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |