ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் ஆவாகனம் செய்த சூரியபகவான்! நல்லூரில் இன்று சூர்யோற்சவம்(நேரலை)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
அறுபடை வீடு கொண்ட திருமுருகன் நல்லூர் பதியமர்ந்து தன்னை நாடி வரும் அடியவர்க்கு அருள்பாலித்து வருகிறான்.
இந்த வள்ளி மணாளன் திருவிழாக்கோலம் பூண்டு நாளொரு வண்ணம் கொண்டு பக்த கோடிகளுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் மகேஸ்வரன் புத்திரனுக்கு மகோற்சவ பெருவிழா ஆரம்பமானது.
நல்லூரானின் மகோற்சவ தரிசனம் காண பெருந்திரளான பக்தர்கள் வருடாவருடம் வருகிறார்கள்.
இன்று (08) நல்லூரானிற்கு 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இடம்பெற்றுள்ளது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.

