நாளை யாழ்ப்பாணம் விரைகிறார் நாமல்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ஷ சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
அவை வருமாறு,
யாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை நாளை 27 ஞாயிற்றுக்கிழமை 2 மணிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.
மாலை 3 மணிக்கு பலாலி வடக்கு அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தையும் திறந்துவைக்கவுள்ளார். பின்னர் தெல்லிப்பழை தையிட்டியில் நீர் விநியோக திட்டத்தை திறந்து வைக்கவுள்ளார்.
மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் விஜயம் செய்யவுள்ளார். மாலை 4.25 மணியளவில் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இருப்பினும் தற்போது மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வருகை இடம்பெறவுள்ளதுடன், கடந்த முறை அவர் வருகை தந்த போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.