மோடியை சந்தித்தார் நாமல் ராஜபக்ச
இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்தியாவில் (India) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான, ரைசிங் பாரத் (Rising Bharat) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்றைய தினம் (08) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
முக்கிய உரை
குறித்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வலுவான தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் நவீன உலகில் இந்தியா அதிக உயரங்களை எட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Was glad to meet Indian Prime Minister Shri @narendramodi Ji on the sidelines of #RisingBharatSummit2025 today. India has reached greater heights in the modern world under his firm leadership with its economy rapidly growing further.@News18India pic.twitter.com/9kIqZDT8Y5
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 8, 2025
நடைபெற்ற உச்சி மாநாட்டில் உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றம் மூலம் இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நாமல் ராஜபக்ச ஒரு குழு விவாதத்தை நடத்தியிருந்தார்.
அத்தோடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய உரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
