நாமல் ராஜபக்சவுக்கு உயிர் அச்சுறுத்தல் : அம்பலப்படுத்தும் மொட்டு கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa )உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam )தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் “தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்சவை விரைவில் குழிக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல்
அவரது இந்த கருத்து நாமல் ராஜபக்சவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதை காண்பிக்கிறது.
ஆளுந்தரப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றமை கவலைக்குரியது.
நாமல் ராஜபக்சவுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், அரசாங்கம் அவருக்கு தீங்கிளைக்கும் நோக்கில் சதி செய்து வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்