நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் எயார்பஸ் வழக்கு விசாரணையை அடுத்தமாதம் (நவம்பர்) 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை தொடர்பில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைகள் முடிவடைந்துள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை தொடரவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று (14) கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கின் நான்காவது சந்தேக நபரான நாமல் ராஜபக்ச சிறைக் காவலில் இருப்பாராயின், அவரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இரண்டு சரீரப் பிணைகள்
இவ்வழக்கு தொடர்பாக, நாமல் ராஜபக்ச தலா ரூ. 100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும், இவ்வழக்கின் முதல் சந்தேக நபரான கபில சந்திரசேன இறந்துவிட்ட போதிலும், இதை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழ் விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரின் கைது தொடர்பாக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த அறிவிப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு கோட்டை நீதிபதிகள் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை வழக்கு தொடர்பாகவே நமல் ராஜபக்ஷ இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த வழக்க்கானது இன்று ( 14.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
விளக்கமறியல் நீடிப்பு
நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |