மித்தெனிய கொள்கலன் கருத்துக்களுக்கு நாமல் மறுப்பு
மித்தெனிய பகுதியில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருட்களுக்கான இரசாயனங்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தரப்பு மறுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு குறித்த செய்திகள் போலியானவை என்று அறிவித்துள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்ட இரசாயனங்கள் மீட்கப்படடிருந்த நிலையில் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தார்.
முழுமையான விசாரணை
எனினும், குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் நாமல் ராஜபக்ச நேரடியாக மறுப்பு வெளியிட்டுள்ளதுடன் இது குறித்து வெளியான செய்தி தொடர்பில் நாமல்பதில தரப்பு பதிளித்துள்ளது.
அத்துடன் ராஜபக்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய கொள்கலன் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாமல் ஊடக சந்திப்பின் போதும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
சம்பந்தப்பட்டவர்களின் கட்சி உறுப்பினர் பதவியை சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே நீக்கியுள்ளது என்றும், இதன் பின்னணி கொள்கலன்கள் சட்டத்தை மீறி விடுவிக்கப்பட்டதா அல்லது கட்சிகளுக்கு இடையே குற்றம் சாட்டப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேரடியாக நிராகரித்த நாமல்
நாட்டிற்குள் கொண்டுவரப்பாட்டதாக கூறப்படும் போதைப்பொருள் உற்பத்தி இரசாயனங்கள் விஷயத்தில், இறக்குமதிக்கும் பறிமுதல் செய்வதற்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து நாமல் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளை நேரடியாக நிராகரித்த நாமல், "இந்த குற்றச்சாட்டுகளை நான் 1000 சதவீதம் நிராகரிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


