விரைவில் அநுர அரசை வீட்டுக்கு விரட்டியடிப்போம் - சுளுரைக்கும் நாமல்
மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கடும் அதிருப்தி
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி அநுர மீதும் அவர் தலைமையிலான அரசு மீதும் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மக்களின் ஆணையை மீறி அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். அரசின் முறையற்ற தீர்மானங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை காவல்துறையினர் மூலம் துன்புறுத்தி அடக்க ஜனாதிபதி முயல்கின்றார்.
கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை ஜனாதிபதி அநுரவும் அவர் தலைமையிலான அரசும் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர்.
இந்த அநுர அணியை மக்களின் ஆதரவுடன் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம். மொட்டுக் கட்சியின் ஆட்சி மீண்டும் மலரும் என்பது உறுதி என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
