ஜேவிபிக்கு நாமல் விடுத்த கடும் எச்சரிக்கை
மக்கள் விடுதலை முன்னணிக்கு (JVP) ஏற்ற கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டிற்கும் ஏற்றவை என்று ஜனாதிபதி நம்புவாரானால், அது ஒரு தவறான முடிவு என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்,
நேற்று ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டிற்குப் பொருந்தாதவை என்ற போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறினார்.
அகங்காரத்துடன் எடுக்கப்படும் முடிவுகள் நீதியைத் தராது
நாட்டிற்குப் பொருத்தமான மற்றும் அவசியமானவற்றை மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய நாமல் ராஜபக்ச, அகங்காரத்துடன் எடுக்கப்படும் முடிவுகள் தேசத்திற்கோ, மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதியைத் தராது என்றும் குறிப்பிட்டார்.

கல்வி முறையிலும், அரச பொறிமுறையிலும் மாற்றங்கள் தேவை என்பதை பொதுஜன பெரமுனவும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
ஜேவிபியினருக்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்படக்கூடாது
எவ்வாறாயினும், அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு சீர்திருத்தமும் நாட்டின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர,ஜே.வி.பி-யினருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டின் மதம் மற்றும் கலாசாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். நாட்டின் கல்வி முறைக்கு ஒவ்வாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |