யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Independent Writer Oct 11, 2025 10:54 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயர் மாற்றம் தொடர்பான கலந்துரையாடலும், பாடசாலை அபிவிருத்தி சங்க விசேட கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பெயரை மாற்றுவது குறித்து ஜே-112 கிராம சேவையாளர் பிரிவின் முதியோர் நலன்புரி சங்கத்தினால், கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வடமாகாண கல்வி அமைச்சுக்கும், அதன் பிறகு வடமாகாண ஆளுநருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் முக்கிய அரசியல்வாதிக்கு வலைவீச்சு! கசிந்தது தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் முக்கிய அரசியல்வாதிக்கு வலைவீச்சு! கசிந்தது தகவல்

 பாடசாலையின் பெயர் 

இது குறித்த பாடசாலை பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, “குறித்த பாடசாலையானது 1930ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை | Name Change Kalviyankadu Hindu Tamil Mixed School

அதன் ஆரம்ப பெயர் அறிய முடியாத நிலையில் 1962ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பாடசாலை சுவீகரிக்கப்பட்டதன் பின்னர், எமது அயல் ஊரான கல்வியங்காட்டின் பெயருடன் பாடசாலையின் பெயர் அமையப்பெற்றதாக கூறப்படுகிறது.

எமது பாடசாலை அமைந்துள்ள காணி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் காணியின் உறுதியில் நல்லூர் கோவில்பற்று, நல்லூர் இறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதிகளில் இறை என குறிப்பிடப்பட்டுவது அந்த காணி அமைந்துள்ள ஊரின் அல்லது கிராமத்தின் பெயரே.

தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த அரச ஊழியர்கள்

தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த அரச ஊழியர்கள்

கோப்பாய் பிரதேச செயலகம்

அதன் அடிப்படையில் பாடசாலை அமைந்துள்ளது நல்லூர் கிராமத்தில், அத்துடன் இந்த காணியின் அமைவிடம் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்டது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை | Name Change Kalviyankadu Hindu Tamil Mixed School

கல்வியங்காடு என்பது எமது அயல் கிராமம். அந்த கிராமம் வலி. கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.

எமது பாடசாலை நல்லூர் பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருக்கும் போது, பாடசாலையின் பெயரின் முன்பாக கல்வியங்காடு என எமது அயல் ஊரின் பெயர் காணப்படுவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எமது பாடசாலையின் பெயரை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்“ என மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் பெயரை மாற்றுமாறு கோரிக்கை | Name Change Kalviyankadu Hindu Tamil Mixed School

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025