நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
GMOA Sri Lanka
By Kathirpriya
நாடளாவிய ரீதியில் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு முன்னால் இன்று (12) ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களை மிகவும் அமைதியான முறையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதனடிப்படையில், இன்றைய தினம் (12) பிற்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரையில் குறித்த ஆர்ப்பாட்டங்கள் நிகழவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையின் செயற்பாடுகள்
இதன் காரணத்தால் இன்று பிற்பகல் முதல் குறித்த வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ள வைத்தியசாலைகளில் விபரங்களையும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது, அவையாவன.
மேற்படி ஆர்ப்பாட்டங்கள்
- காலி மாவட்டம் - கராபிட்டிய போதனா வைத்தியசாலை
- மாத்தறை மாவட்டம் - மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை
- ஹம்பாந்தோட்டை மாவட்டம் - தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
- நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை
- பதுளை மாவட்டம் - பதுளை மாவட்ட பொது வைத்தியசாலை
- அம்பாறை மாவட்டம் - அம்பாறை வைத்தியசாலை
- அம்பாறை மாவட்டம் - தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலை
- மட்டக்களப்பு மாவட்டம் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை
- திருகோணமலை மாவட்டம் - கந்தளாய் ஆதார வைத்தியசா
- புத்தளம் மாவட்டம் - ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலை
- கேகாலை மாவட்டம் - கேகாலை பொது வைத்தியசாலை
- இரத்னபுரி மாவட்டம் - இரத்தினபுரி போதனா வைத்தியசாலை
- அநுராதபுரம் மாவட்டம் - அனுராதபுரம் போதனா வைத்தியசாலை
- மன்னார் மாவட்டம் - மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
- முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை
- வவுனியா மாவட்டம் - வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை
- கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி பொது வைத்தியசாலை
போன்ற இடங்களுக்கு முன்னாலேயே மேற்படி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்