இயற்கை உர விவசாயத்தை தனிநபரால் செய்ய முடியாது : சஷிந்திர ராஜபக்ச
முழுமையான இயற்கை உர விவசாயத்தை தனிநபரால் செய்ய முடியாது என்பதை தாம் ஏற்றுகொள்வதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச(Shasheendra Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அதிகாரிகளுக்கு குறிப்பாக விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு இது தொடர்பில் போதியளவு தெளிவுப்படுத்தப்படவில்லை.
நேரடியாக இது தொடர்பில் விவசாயிகளுக்கு தௌிப்படுத்தல்களை மேற்கொள்வதிலும் சில குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ள கூறினார்.
மேலும் நூற்றுக்கு நூறு சதவீதம் இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதென்பது தனி நபரால் முடியாத காரியம் என்பதை தெரிந்துகொண்டோம்.அதனை நாம் ஏற்றுகொள்கிறோம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே விவசாயத்தை மேற்கொண்டனர். இரசாயன உரங்கள் தொடர்பில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்குப் போதிய விளக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.