இந்திய இராணுவத்தின் அதிரடியில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகள் யார்..! வெளியானது விபரம்
ஒபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகளின் யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அஸார் என்கிற உஸ்தாத், காலித் என்கிற அபு ஆகாஷா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன் கான் ஆகியோர் உயிரிழந்த 5 முக்கிய தீவிரவாதிகள் ஆவர்.
முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள்
இறந்த 5 பேருமே லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய 2 அமைப்புகளில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் ஆவர்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் திகதி இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பல்வேறு தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல முக்கிய தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களில் முக்கியமான தீவிரவாதிகளின் விவரங்களே தற்போது வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
