உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உங்களில் யாருக்காவது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டால் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
மரண அச்சுறுத்தல்
அண்மைக்காலங்களில் இறந்தவர்களில் பலர் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியிருந்தார்கள்.
அவர்கள் ஏதாவது தகராறுகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது.
அவ்வாறான உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் இலங்கையை (Sri Lanka) விட்டு வெளியேறலாம் அல்லது வீடுகளை விட்டும் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
