பேச்சுவார்த்தை மூலமான தீர்வு - இயலாமையை ஒத்துகொண்ட சம்பந்தன்
பேச்சின் மூலமான தீர்வு கானல் நீர் கனவாகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(1) வெளியான புரொன்ட்லைன் எனும் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த பேட்டியில் மேலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர்,
பேச்சுவார்த்தை மூலமான தீர்வு

''தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது கானல் நீராக மாறிக் கொண்டிருக்கும் கனவு. இதனால் தமிழர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.
உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தொகை மற்றும் கலாசார மாற்றங்கள் காரணமாக அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள்.
தமிழ் அரசியல் கட்சிகளால் பெரிய அளவில் முன்னேறவும் முடியவில்லை.
அனைத்துலக சமூக அழுத்தம்

அனைத்துலக சமூகம் தலைமை தாங்கி வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு ஏற்பாட்டிற்கு அழுத்தம் கொடுப்பது கடமையாகச் செய்ய வேண்டிய ஒன்று.
வடக்கு கிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் தங்கள் அடையாளம், சுயமரியாதை ஏன் கௌரவத்தைக் கூட பேண இயலாத நிலை ஏற்படும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.