காசாவிற்குள் நுழைந்துள்ள இஸ்ரேலியப் படைகள் இடைநடுவே திரும்பிவிடுவார்களா!
காசா பிரதேசத்தினுள் இஸ்ரேலிய ராணுவம் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தமையினை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, முக்கிய விடயமொன்றினை குறிப்பிட்டிருந்தார்.
"This is our second war of independence" என்று அவர் தெரிவித்திருந்தார்.
அதாவது, தனது சுதந்திரத்தின் போது இஸ்ரேல் எதிர்க்கொண்ட யுத்தத்தை போன்றதொரு யுத்தத்தை தற்போது, இஸ்ரேல் எதிர்க்கொள்வதாக அவர் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
அரபு நாடுகளுடனான யுத்தம்
1948ஆம் ஆண்டு, இஸ்ரேலும் பலஸ்தீனமும் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற அதே நாளிலேயே, பல அரபு நாடுகள் இணைந்து, இஸ்ரேல் மீது கடுமையான யுத்தத்தினை பிரகடனம் செய்திருந்தன.
1948ஆம் ஆண்டு, இஸ்ரேல் மீது அரபு நாடுகள் மேற்கொண்ட அந்த யுத்தத்துடன்தான், தற்போது காசாவில் இஸ்ரேல் ஆரம்பித்துள்ள யுத்தத்தினை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒப்பிட்டு பேசியிருந்தார்.
1948ஆம் ஆண்டு மே மாதம், எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்தான், ஈராக், சவுதி அரேபியா, எமன் போன்ற நாடுகளுடன் அனைத்து பலஸ்தீன அமைப்புக்களும் இணைந்து இஸ்ரேல் மீது கடுமையான யுத்தத்தினை மேற்கொண்டன.
இஸ்ரேலின் அத்தனை எல்லைகளிலும் இருந்து, அதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் உள்ளே இருந்தும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இஸ்ரேல் மேற்கொண்டு வெற்றிகள் பல கண்ட எத்தனையோ யுத்தங்கள் அதன் வரலாற்றில் இருக்க, இன்றைய பலஸ்தீன பிரதேசங்களான காசா, மேற்கு கரை உட்பட பல பிரதேசங்களை அரபு நாடுகள் கைபற்றிய அம்முதல் அரபு இஸ்ரேல் யுத்தத்துடன், எதற்காக இஸ்ரேலிய பிரதமர் தற்போதைய காசா யுத்தத்தினை ஒப்பிட்டு பேசினார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.
இந்நிலையில் காசா யுத்தம் பற்றிய மற்றுமொரு பரிணாமத்தினை இன்றைய ஐ.பி.சி தமிழின் நிதர்சனம் நிகழ்ச்சி ஆராய்கின்றது.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விடயங்களுக்கு காணொளியினை காண்க.