ஜனாதிபதியின் செயலாளரால் புதிய தலைவர்கள் நியமனம்
1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் (Nandika Sanath) குமாநாயக்க இன்று (06) வழங்கி வைத்தார்.
அதன்படி, 1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவராக ஏ.எம்.என். ரத்நாயக்க மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஆர்.ஜே.எம்.ஏ.பீ.சம்பத் மற்றும் நளீன் பெரேரா ஆகியோர் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அரச கரும மொழிகள் ஆணைக்குழு
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |