கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் (Commissioner General of Elections) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் (Rasika Peiris) இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றியதாகக் கூறினார்.

அத்துடன் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தனது கடமைகளைச் செய்வதில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |