சஜித் - அனுர இடையிலான விவாதத்திற்கான புதிய திகதிகள் வெளியாகின
ஐக்கிய தேசியக் கட்சியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் (JVP) தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayake) இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளது.
இதற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி சில திகதிகளை பரிந்துரைத்துள்ள போதும் அதற்கு உரிய பதில்கள் வழங்கப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா (Nalin Bandara Jayamaha) இந்த புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு (Nalinda Jayatissa) எழுதிய கடிதத்தில் அவர் இந்த திகதிகளை குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தலைவர்களுக்கு இடையிலான விவாதம்
இதன்படி, இரண்டு கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விவாதம் ஜூன் 3, 4, 5, 6, 7ஆம் திகதிகளிலும், பொருளாதார நிபுணர்கள் இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30 அல்லது 31ஆம் திகதிளிலும் நடத்தப்படலாம் என்று நளின் பண்டார குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பரிந்துரைகளுக்கான பதில்கள் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |