மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய நிலையில், வைத்திய நிர்வாக சேவை பதவியுயர்வு மற்றும் இடமாற்ற கட்டளையின் பிரகாரம் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா சிரேஷ்ட தரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைவாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அஸாத் எம் ஹனீபா இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீனிடமிருந்து விடுவிப்பு கடிதத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
நன்றிகள்
வைத்தியர் அஸாத் எம் ஹனிபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி, தரமுயர்த்தல் மற்றும் அதன் வளர்ச்சிப்பாதைக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி பேசிய பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிரிவுத்தலைவர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா அதிக தேசிய விருதுகளைப் பெற்று கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பெயரை புகழ்பூக்கச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |