மீண்டும் உயர்வடைந்த எரிபொருள் விலை
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka
By Shalini Balachandran
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் 2026 மே இரண்டாம் ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபாய் 410.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபாய் 470.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபாய் 392.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபாய் 458.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி