கொழும்பு மாநகர சபை யாருக்கு : சஜித் - ரணிலுக்கு இடையில் வெடித்துள்ள மோதல்
கொழும்பு மாநகர சபையைக் (Colombo Municipal Council) கைப்பற்றும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியுறும் கட்டத்தை அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிடிவாதம் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கூடுதல் ஆசனங்களைப் பெற்ற கட்சியாக தெரிவாகியுள்ளது.
மாநகர சபை
இருப்பினும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 69 ஆசனங்கள் வெல்லப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றலாம் எனும் நிலை உள்ளது.
இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகர சபை அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினால் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது.
எனினும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீதுள்ள தனிப்பட்ட பகைமையுணர்வு காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பமில்லை என்று தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாக கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 16 மணி நேரம் முன்
