கிழக்கில் 1,570 ஏக்கருக்குள் பண்ணையாளர்களை முடக்கி புதிய குடியேற்றத் திட்டம்

Sonnalum Kuttram
By Erimalai Jul 02, 2026 09:38 AM GMT
Report

மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோருக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்க முயற்சித்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்றிட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு எல்லை பிரதேசமான மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத விவசாய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் உருவாகி உள்ள முறுகல் நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு எல்லைப் பகுதி

“மட்டக்களப்பு எல்லைப் பகுதியில் உள்ள மயிலத்தமடு மாதவனை காணிகளுக்குள் அத்துமீறி சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய வெளியேற்றப்பட்ட நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓரிரு மாதங்களுக்குள்ளேயே குறித்த காணிகளுக்குள் மீண்டும் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குழுக்கள் உள்நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் அதனை தடுக்க முயற்சித்த பண்ணையாளர்களுக்கும் சட்ட விரோதமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் மேற்படி பிரதேசங்களுக்கு பொறுப்பான அரச நிர்வாகமோ, பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு தரப்பினரோ இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் சுமார் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கருக்கு காணிகள் காணப்படுகிறது . இதில் வெறும் 1570 ஏக்கர் காணிகளை மாத்திரமே கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்கி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

மகாவலி அபிவிருத்தித் திணைக்களம்

இது பண்ணையாளர்களின் கால்நடைகளை வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.இன் நிலையில் மீதி காணிகளை மகாவலி அபிவிருத்தித் திணைக்களமும்,வன இலாகா திணைக்களமும் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது.

கிழக்கில் 1,570 ஏக்கருக்குள் பண்ணையாளர்களை முடக்கி புதிய குடியேற்றத் திட்டம் | New Immigration Plan To Freeze Farmers In The East

விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரலாற்றில் அது ஒரு நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கிகாரத்தை வழங்கும் திணைக்களமாக உள்ள நிலையில் மட்டக்களப்பு எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை பிரதேசங்களிலும் அவ்வாற குடியேற்றம் ஒன்றிற்கு மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட ரீதியான அங்கிகாரம் துணை போகுமா அதற்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு வழங்குமா என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஆட்சியாளர்களை மீறி தொடர்ந்தும் எவ்வாறு நடைபெற்று வருகிறது.

எம்மை பொறுத்தவரை இந்த விடயத்தை அரசியலாக்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜெயம்பத் முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது? இதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020