சமூகவலைத்தளங்களில் போலித் தகவல்கள்- நடைமுறையாகிறது புதிய சட்ட மூலம்!
parliament
Ali Sabry
fake news
social media
sri Lanka
By Kalaimathy
போலித் தகவல்களைப் பரப்புவோர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு புதிய சட்ட மூலம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி(Ali Sabry) நேற்று நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.
அதேவேளை இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.