ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சிக்கு ஏகமனதாக எதிர்ப்பு - எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபை
நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒலிபரப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்ப்பதென ஏகமனதாக தீர்மானித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய எதிர்க்கட்சிகளின் நிறைவேற்று சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்களுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும், நிலைப்பாட்டில், மக்கள் தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறுப்பட்ட தரப்பினர் மத்தியிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன
இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மனோ கணேசன், லக்ஸ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா, ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்ரமரத்ன, சரித ஜயஸ் ஹேரத், சன்ன ஜயஸ் ஹேரத் என பலரும் கலந்துக்கொண்டனர்.