நிதி வலயமாக மாறவுள்ள துறைமுக நகரம் : அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
Colombo
By Kathirpriya
கொழும்பு துறைமுக நகரத்தினை நிதி வலயமாக மாற்றவுள்ளதாகவும், அதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று (26) கொழும்பில் அமைந்துள்ள ஹில்டன் சொகுசு விடுதியில் ஆண்டுக்கான (2023) வர்த்தக மத்தியஸ்த கருத்தரங்கு இடம்பெற்றது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
நிதி வலயம்
துறைமுக நகரத்தை 'கொழும்பு நிதி வலயமாக' மாற்றுவதற்கான புதிய சட்டம் ஒன்றை அதிபர் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இது கடல்சார் நடவடிக்கைகளுக்கான அதிகார வரம்பை வழங்கும் அமைப்பாகவும் திகழும் என அதிபரின் ஊடகப் பிரிவு (PMD) அறிவித்துள்ளது.
இந்த வருட (2023) இறுதிக்குள் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிபர் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
மரண அறிவித்தல்
