அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டம்! குற்றவாளிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கப்போகும் அரசாங்கம்
அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்ய தற்காலிகமாக பயங்கரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த சட்டம் அறிமுகமானதும் அது மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஏற்கனவே சிறையில் உள்ள குற்றவாளிகள் புதிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகம் இருந்தால், அவர்களை மீண்டும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படுவது என கூறப்படுகிறது.
குற்றவாளிகளின் சுதந்திரத்திற்கு முடிவு
இதனால் சிறையில் இருந்தபடியே குற்றச் செயல்களை நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், சட்டத்தில் இருந்த இடைவெளிகளை பயன்படுத்தி பெரிய குற்றவாளிகள் தப்பிக்க முடியாத நிலை உருவாகும் என்றும், இனி யாரும் சிறைக்குள் இருந்தபடியே செயல்பட முடியாது என்றும் மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், சிறைக்கு உள்ளேயோ வெளியேயோ குற்றவாளிகள் சுதந்திரமாக இருக்க முடியாத சூழல் உருவாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்