சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்கியுள்ள சிறிலங்கா - புதிய அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி

Parliament of Sri Lanka SLPP Ranil Wickremesinghe
By Dharu Dec 11, 2022 11:17 AM GMT
Report

புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கும் பட்டியல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் சில மாதங்களுக்கு முன்னரே அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்த வண்ணமே காணப்படுகின்றது.

புதிய நியமனம்

சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்கியுள்ள சிறிலங்கா - புதிய அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி | New Mp Parliament Appointment Delay Sri Lanka

வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்று வதந்திகள் பரவியநிலையில் தற்போது அது தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

அமைச்சரவையில் தற்போது பதினெட்டு உறுப்பினர்கள் காணப்படுவதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க அதிபருக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.

அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம்.ஏ.தாவுல்லா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

எஞ்சியவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015