சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் காவல் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றுள்ளார்.
பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.
கௌரவிக்கப்பட்ட பொறுப்பதிகாரி
பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.
சுன்னாகம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக ஏற்கனவே கடமை புரிந்த காவல்துறை அதிகாரியான பிறடோ என்பவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய பொறுப்பதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |