தங்காலை நகர சபையின் மேயருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி!
Sajith Premadasa
SJB
SriLanka
Tangalle
By Chanakyan
தங்காலை நகர சபையின் மேயரான ரவிந்து வேதராச்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சமூக மேம்பாட்டு விவகார செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான நியமனக் கடிதம் இன்று எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் கொழும்பு எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து ரவிந்து வேதராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சொந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ரவிந்து வேதராச்சி ஒரு முக்கிய இளம் தலைவராக இருப்பதோடு,அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பு என்பன காரணமாகவே அவருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி