அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்
சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை எட்டிய நிலையில் நேற்றுடன்(27) பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இந்த நிலையில் புதிய தேசிய புலனாய்வுத் தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்றார்
அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று(28) பாதுகாப்பு அமைச்சில் வைத்து, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த வழங்கியதை அடுத்து, அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட 35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றிருந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கவசப்படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட சிறிலங்கா இராணுவத்தில் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்