பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!
அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாணவர் காப்புறுதி திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போதே அமைச்சர் மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த காப்புறுதியானது இன்று முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு இதற்காக 7,112 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனியார் வைத்தியசாலை
இந்த காப்புறுதி மூலம் அரச அல்லது தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான நன்மை ரூ. 300,000/- மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கு ரூ. 20,000/- மற்றும் தீவிர நோய் நன்மையாக ரூ. 1,500,000/- வரை மாணவர்கள் பலனடைய முடியும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆயுள் காப்புறுதியின் கீழ் வருடாந்த வருமானம் 180,000 ரூபாவுக்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிகமாக, 'அவஸ்வெசும' திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 75,000 ரூபா மற்றும் ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையான 225,000/= தொகையானது குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காப்பீட்டுக்கான இலத்திரனியல் அட்டை ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |