பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய தகவல்: கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்தங்களை வெளியிட்டதன் மூலம், பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு மாணவர்களும் 17 ஆண்டுகளில் பாடசலை கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி கல்வியானது 4 வயதிலும், முதன்மைப் பிரிவு 1 ஆம் தரம் முதல் 5 ஆம் தரம் வரையிலும், ஜூனியர் பிரிவு 6 ஆம் தரத்திலிருந்து 8 ஆம் தரம் வரையிலும் மூத்த பிரிவாக 9 முதல் 12 வரையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி
அதுமட்டுமல்லாமல் சாதாரண தரப் பரீட்சைக்கான படங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் பிரகாரம் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை கற்கும் வாய்ப்பை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |