கொழும்பில் நடைமுறையாகும் புதிய போக்குவரத்து சேவை
இலங்கை போக்குவரத்துச் சபையானது "கொழும்பு பயணங்கள்" எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த பேருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
முதற்கட்டமாக கொழும்பை மையமாக கொண்டு நான்கு சுற்றுலா வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னோடி திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும்.
பேருந்து சேவை
முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கட்டுப்பாட்டு அதிகாரசபையானது, நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலா வலயங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து சேவையை விரிவுபடுத்த நம்புகிறது.
இலங்கையில் பல்லின மதம் மற்றும் பல்லின மக்கள் வாழ்வதால், கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய மத வழிபாட்டுத் தலங்களை இந்த சுற்றுலா வளையங்களில் இணைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வரலாற்று விஷயங்களைக் காணும் வாய்ப்பை வழங்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு இந்த பேருந்து சேவை வழங்கப்படுவதால், போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒழுக்கமான சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அதற்காக பயன்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |