புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல - டக்ளஸ்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன” - என்றார்.
தேர்தலுக்கான கட்டுப்பணம்
இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்கு மாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
