மீண்டும் காவல்துறை மா அதிபராக பொறுப்பேற்ற சி.டி.விக்ரமரத்ன!
காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நான்காவது தடவையாகவும் அவரது சேவைக்காலம் நீடிக்கப்பட்டிருந்தாலும், நீடிக்கப்பட்ட காலப்பகுதி தொடர்பில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
கால்துறை மா அதிபரான சி.டி.விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது சேவைக்காலத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகள் நீடித்திருந்தார்.
விக்ரமரத்னவின் பதவிக்காலம்
இதனை தொடர்ந்து, அவரது சேவைக்காலத்தை மேலும் 3 மாதங்களால் நீடிப்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அண்மையில் அரசியலமைப்பு பேரவை அனுமதி மறுத்திருந்தது.

அத்துடன், புதிய கால்துறை மா அதிபரை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகள் இதுவரை அரசியலமைப்பு பேரவைக்கு கிடைக்கப் பெறவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.
மற்றுமொரு முறை நியமனம்
இந்த நிலையில், காவல்துறை மா அதிபரான சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் ரணில் விக்ரமசிங்கவால் இன்று மற்றுமொரு முறை நீடிக்கப்பட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்