சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை
Sri Lanka Tourism
Sri Lanka Railways
By Sumithiran
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஒன்பது வளைவு பாலம் மற்றும் அரண்மனையை மின்சார குமிழ்களால் ஒளிரச் செய்ய தொடருந்து திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த திட்டத்தின் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எழுபது சூடான வெள்ளை விளக்குகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்று தொடருந்து திணைக்களத்தின்மேற்பார்வை பொறியாளர் (மூத்தவர்) தனுஷ்க திசாநாயக்க தெரிவித்தார்.
104 ஆண்டுகள் பழமையான ஒன்பது வளைவு பாலம்
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1921 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படும் 104 ஆண்டுகள் பழமையான ஒன்பது வளைவு பாலத்தினை ஒளிரச் செய்தல், பாலத்தின் கட்டிடக்கலை அழகைப் பாதுகாக்க ஒரு பாரம்பரிய நினைவுச்சின்ன விளக்கு அமைப்பாக செய்யப்படும் என்று தொடருந்து திணைக்களத்தின் பொறியாளர் தனுஷ்க திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

