இந்தியாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் : மற்றுமொரு மாணவன் பலி
Kerala
India
Virus
By Jaso
இந்தியாவின்(india) கேரள(kerala) மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த 24 வயதுடைய இளைஞன் உயர்தரப் பாடசாலை மாணவன் எனவும், குறித்த மாணவனின் நெருங்கிய உறவினர்கள் 151 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது மரணம்
கடந்த ஜூலை மாதம் 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்ததை அடுத்து, இந்த ஆண்டு மலப்புரத்தில் நிபாவால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.

வௌவால்கள் மற்றும் பன்றிகள்
உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பற்றி எச்சரித்துள்ளது மற்றும் அதை தடுக்க தடுப்பூசி அல்லது பிற சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிபா வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |