தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவி விலகினார்
Dr Ramesh Pathirana
Sri Lanka
By Sathangani
இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, தாம் அந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
மனோஜ் கமகே பதவி விலகல் கடிதத்தை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று (13) முதல் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக சட்டத்தரணி என்ற வகையில் தான் பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணிப்பாளர் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்