அமெரிக்காவுடனான ஒப்பந்தம் : ஈரானின் உறுதியான முடிவு வெளியானது
ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாத வரை, வோஷிங்டனுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் தெஹ்ரான் ஏற்காது என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் இன்று(31)ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"எதிரியின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை இல்லை. பதிலுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு, உறுதியான முடிவுகளை அடைவதே எங்களின் ஒரே அளவுகோலாகும்," என்று, நாடாளுமன்றத்தின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற காணொளிக் கூட்டத்தின் போது காலிபாஃப் கூறியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB மேற்கோள் காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் போர் நிறுத்தம்
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது, ஆனால் அதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நீடித்த உடன்படிக்கையை எட்டத் தவறிவிட்டன.

பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீடித்தார். அதன்பிறகு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கி போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், ஈரானும் அமெரிக்காவும் முன்மொழிவுகளையும் எதிர் முன்மொழிவுகளையும் தொடர்ந்து பரிமாறி வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |