போர்நிறுத்த ஒப்பந்தத்தை தூக்கியெறிந்த ட்ரம்ப்: நேட்டோவில் பகிரங்க அறிவிப்பு!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump), நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற நேட்டோ(NATO) உச்சிமாநாட்டை அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரானுடன் வரும் வாரம் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம். சொல்லப்போனால் எனக்கு இது அவசியமில்லை.
அவர்கள் போர் செய்துவிட்டார்கள், இப்போது தங்கள் வழியைக் காண்கிறார்கள். எனக்கு ஒப்பந்தம் இருந்தாலோ இல்லையோ அதில் கவலையில்லை,” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் தீர்மானம்
அதே நேரத்தில், கடந்த மோதல் நிலைக்கு முன்பாக அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படப்போகிறதெனவும் அவர் கூறினார்.
“நாம் முன்பே கேட்டதைத்தான் இப்போதும் கேட்கப்போகிறோம். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது. ஆனால் அதை நாம் ஏற்கனவே அழித்துவிட்டோம்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை நாங்கள் வெடிக்க செய்துவிட்டோம். எனவே, ஒப்பந்தம் கிடைக்காவிட்டாலும் எனக்குப் பெரிய பிரச்சனையில்லை,” என ட்ரம்ப் தெரிவித்தார்.
அத்தோடு, அமைச்சர் ரூபியோவுடன் ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடியதாகவும், அது அவர்களது தயார் மனப்பான்மை மீது அமெரிக்காவின் தீர்மானம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா
